மாவட்ட செய்திகள்

உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 82 லட்சம் வருவாய் + "||" + By bill offering Rs 2 crore 82 lakh revenue

உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 82 லட்சம் வருவாய்

உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 82 லட்சம் வருவாய்
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவுக்கு பிறகு நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் ரூ.2 கோடியே 82 லட்சம் வருவாயாக கிடைத்தது.
பழனி: 

உண்டியல் காணிக்கை
தமிழகத்தில் உள்ள ஆன்மிக தலங்களில் முக்கியமானதாகவும், முருகப்பெருமானின் 3-ம் படைவீடாகவும் பழனி முருகன் கோவில் திகழ்கிறது.

 இங்கு திருவிழா மட்டுமின்றி, தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். 

இவ்வாறு வருகிற பக்தர்கள் நேர்த்திக்கடனாக பணம், தங்கம், வெள்ளி பொருட்களை உண்டியல்களில் காணிக்கையாக செலுத்துகின்றனர். 

இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன், காணிக்கை எண்ணும் பணி கோவில் நிர்வாகம் சார்பில் நடந்து வருகிறது.

 56 நாட்களுக்கு பிறகு...
அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 10-ந்தேதி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டன. 

இதைத்தொடர்ந்து 56 நாட்களுக்கு பிறகு நேற்று பழனி மலைக்கோவிலில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. 

கோவில் அறங்காவலர் குழு தலைவர் அப்புக்குட்டி, செயல்அலுவலர் கிராந்திகுமார்பாடி ஆகியோர் தலைமை தாங்கினர். 

அறங்காவலர்கள் செல்லமுத்தையா, கமலக்கண்ணன், லதா, சேகர், உதவி ஆணையர் செந்தில்குமார், மதுரை உதவி ஆணையர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பழனி பகுதியில் உள்ள வங்கி அலுவலர்கள், கோவில் ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் என 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தங்கம், வெள்ளி பொருட்கள்
பங்குனி உத்திர திருவிழாவுக்கு பிறகு நடைபெற்ற இந்த உண்டியல் காணிக்கை எண்ணிக்கை மூலம் ரூ.2 கோடியே 82 லட்சத்து 87 ஆயிரத்து 560 வருவாயாக கிடைத்தது.

இதேபோல் தங்கம் 1 கிலோ (1,172 கிராம்), வெள்ளி 23½ கிலோ (23,645 கிராம்), மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுக்கள் 148-ம் கிடைத்தது.

மேலும் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன வேல், சங்கிலி, மோதிரம், பாதம் மற்றும் பட்டம், பரிவட்டம், நவதானியங்கள், பாத்திரங்கள், கெடிகாரம், பட்டு வேட்டி உள்ளிட்டவையும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

2-வது நாளாக இன்று (வெள்ளிக்கிழமை) உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. உண்டியல் காணிக்கை மூலம் ரூ.13 லட்சம் வருவாய்
நத்தம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.13 லட்சம் வருவாயாக கிடைத்தது.
2. உண்டியல் காணிக்கை மூலம் ரூ.4½ லட்சம் வசூல்
உண்டியல் காணிக்கை மூலம் ரூ.4½ லட்சம் வசூல்
3. நெல்லையப்பர் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.17¾ லட்சம் 174 கிராம் தங்கமும் கிடைத்தது
நெல்லையப்பர் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.17¾ லட்சம், 174 கிராம் தங்கமும் கிடைத்தது.
4. திருப்பதி கோவிலில் ரூ.29 கோடி உண்டியல் காணிக்கை
திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ரூ.29 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தப்பட்டு இருந்தது.