ஸ்டெர்லைட் போராட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி கமல்ஹாசன் மனு

ஸ்டெர்லைட் போராட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி கமல்ஹாசன் மனு
x
தினத்தந்தி 9 April 2021 3:01 AM IST (Updated: 9 April 2021 3:01 AM IST)
t-max-icont-min-icon

ஸ்டெர்லைட் போராட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி கமல்ஹாசன் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கில் சி.பி.ஐ. போலீசாரை எதிர்மனுதாரராக சேர்த்து நீதிபதி உத்தரவிட்டார்.

மதுரை, 

ஸ்டெர்லைட் போராட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி கமல்ஹாசன் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கில் சி.பி.ஐ. போலீசாரை எதிர்மனுதாரராக சேர்த்து நீதிபதி உத்தரவிட்டார்.

கமல்ஹாசன் மனு

மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “கடந்த 2018-ம் ஆண்டில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதாக கூறி தூத்துக்குடி தெற்கு போலீஸ் நிலையத்தில் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
சட்டத்தை மீறும் வகையிலோ, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையிலோ எவ்விதமான செயலிலும் நான் ஈடுபடவில்லை. எனவே தூத்துக்குடி போலீஸ் நிலையத்தில் என் மீது பதிவான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

எதிர் மனுதாரர்

இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது என்றார். இதையடுத்து கமல்ஹாசன் மனு தொடர்பாக சி.பி.ஐ. போலீசாரை எதிர்மனுதாரராக சேர்த்து நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை ஒத்தி வைத்தார்.

Next Story