மாவட்ட செய்திகள்

சங்ககிரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா -தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு + "||" + Corona for 4 members of the same family in Sankagiri

சங்ககிரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா -தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு

சங்ககிரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த  4 பேருக்கு கொரோனா -தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு
சங்ககிரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் வசிக்கும் பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சங்ககிரி:
சேலம் மாவட்டம் சங்ககிரி எபினேசர் காலனியை சேர்ந்த 57 வயது லாரி உரிமையாளர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளி மாவட்டத்திற்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரது தந்தை, தாய், மகன் ஆகியோருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. 
மேலும் அதே பகுதியை சேர்ந்த  79 வயது மூதாட்டி, 38 வயது பெண் ஆகியோருக்கும் கொரோனா உறுதியானது. இதனால் ஒரே தெருவில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், நேற்று சங்ககிரி தாசில்தார் விஜி, பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணி ஆகியோர் அந்த பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து, தகரத்தினால் ஆன தடுப்பு வேலியை அமைத்தனர். இதனால் வெளிநபர்கள் அந்த பகுதிக்குள் செல்ல முடியாது.
மேலும் சங்ககிரி டி.பி.சாலையை சேர்ந்த 26 வயது வாலிபருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 7 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் சங்ககிரி பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் லோகநாதன் தலைமையில், துப்புரவு மேற்பார்வையாளர்கள், பேரூராட்சி பணியாளர்கள் கொண்ட குழுவினர்கள், எபினேசர் காலனி, டி.பி.சாலை பகுதி முழுவதும், கிருமி நாசினி தெளித்து கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டனர்.