மீன்பிடி திருவிழா


மீன்பிடி திருவிழா
x
தினத்தந்தி 8 April 2021 9:44 PM GMT (Updated: 8 April 2021 9:44 PM GMT)

மேலூர் அருகே குழிச்செவல்பட்டி வலயங்குளம் கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

மேலூர், 
மேலூர் அருகே குழிச்செவல்பட்டி வலயங்குளம் கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இந்த கண்மாயில் வளரும் மீன்களை தண்ணீர் வற்றியவுடன் ஆண்டுதோறும் பொதுமக்கள் இலவசமாக மீன் பிடிக்கும் விழா நடப்பது வழக்கம். 
அதே போல இந்த ஆண்டும் விழா நடைபெற்றது. சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் குடும்பத்தினருடன் வந்து கண்மாயில் துள்ளித்திரிந்த மீன்களை பிடித்து சென்றனர். அவ்வாறு பிடிக்கும் மீன்களை விற்பனை செய்யாமல் வீட்டில் சமைத்துதான் சாப்பிடவேண்டும் என்பது இப்பகுதி மக்களின் பாரம்பரிய வழக்கமாகும். அதன்படி பிடிபட்ட மீன்கள் அனைத்து வீடுகளிலும் சமையல் செய்து கிராம மக்கள் சாப்பிட்டு மகிழ்ந்தனர். 
இதனால் கிராமந்தோறும் கம கமவென மீன் சாப்பாடு வாசனை பரவியது.

Next Story