தாளவாடி அருகே சோளத்தட்டு போரில் தீ விபத்து


தாளவாடி அருகே சோளத்தட்டு போரில் தீ விபத்து
x
தினத்தந்தி 9 April 2021 3:15 AM IST (Updated: 9 April 2021 3:15 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே சோளத்தட்டு போர் தீப்பிடித்து எரிந்து நாசம் ஆனது.

தாளவாடி
தாளவாடி அருகே உள்ள மெட்டல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 50). கூலி தொழிலாளி. இவர் 4 மாடுகள் வளர்த்து வருகிறார். இவற்றுக்கு தீவனமாக தனது நிலத்தில் சோளத்தட்டு போரை அடுக்கி வைத்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணி அளவில் சோளத்தட்டு போர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்று பலமாக வீசியதால் மளமளவென தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதை பார்த்த பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். எனினும் சோளத்தட்டு போர் முற்றிலும் எரிந்து நாசம் ஆனது.

Next Story