ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து செல்லும் திருச்சி ரெயில் நாளை ரத்து
ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து திருச்சி செல்லும் ரெயில் நாளை (சனிக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது.
ஈரோடு
ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து திருச்சி செல்லும் ரெயில் நாளை (சனிக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே சேலம் கோட்ட மேலாளர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஈரோடு மற்றும் கரூர் ரெயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட சாவடிப்பாளையம் பகுதியில் ரெயில்வே லெவல் கிராசிங், நுழைவுப்பாலம் உள்ளிட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே ஈரோட்டில் இருந்து கரூர் வழித்தடத்தில் திருச்சி செல்லும் பாலக்காடு-திருச்சி சிறப்பு ரெயில் (எண் 06844) 10-ந் தேதி (நாளை) ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் பாலக்காட்டில் இருந்து புறப்பட்டு ஈரோடு ரெயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.
இதுபோல் திருச்சியில் இருந்து பாலக்காடு செல்லும் ரெயில் எண் 06843 ஈரோடு வரை ரத்து செய்யப்படுகிறது.
இந்த ரெயில் ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பாலக்காடு செல்லும். எனவே பொதுமக்கள் சவுகரியத்தை பொறுத்து ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story