மாவட்ட செய்திகள்

ஏற்காட்டில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது + "||" + Youth arrested for making 15 year old girl pregnant in Yercaud

ஏற்காட்டில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

ஏற்காட்டில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
ஏற்காட்டில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஏற்காடு:
ஏற்காடு செம்மநத்தம் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் முத்து. இவரது மகன் ஸ்டீபன் (வயது 25). இவர் தனது காரில் ஏற்காடு நகரப்பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை, அவரது தோழியுடன் செம்மநத்தம் பகுதியில் இருந்து ஏற்காட்டுக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது ஆசைவார்த்தைகளை கூறி, சிறுமியை, ஸ்டீபன் கற்பழித்து விட்டதாக தெரிகிறது. இதில் சிறுமி கர்ப்பம் அடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஸ்டீபனை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை ஆத்தூர் சிறையில் அடைத்தனர்.