மாவட்ட செய்திகள்

கொரோனாவால் கடுமையான பாதிப்பு; மராட்டியத்துக்கு உதவ மத்திய அரசு உறுதியளித்துள்ளது: சரத்பவார் + "||" + Severe damage by corona; The Central Government has promised to help the Maharashtra: Sharad Pawar

கொரோனாவால் கடுமையான பாதிப்பு; மராட்டியத்துக்கு உதவ மத்திய அரசு உறுதியளித்துள்ளது: சரத்பவார்

கொரோனாவால் கடுமையான பாதிப்பு; மராட்டியத்துக்கு உதவ மத்திய அரசு உறுதியளித்துள்ளது: சரத்பவார்
கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட மராட்டியத்திற்கு உதவுவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறினார்.

மத்திய மந்திரியுடன் ஆலோசனை

மராட்டியத்தில் நாளுக்கு, நாள் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. போதிய தடு்ப்பூசி வழங்க மத்திய அரசு முன்வரவில்லை என்று மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி குற்றம்சாட்டினார். சிவசேனாவும் மத்திய அரசை விமர்சித்து உள்ளது.

இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவர் சரத்பவார், மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தனுடன் நேற்று முன்தினம் மராட்டிய கொரோனா பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து அவர் நேற்று கூறியதாவது:-

மத்திய அரசு உறுதி

மராட்டியத்தின் தற்போதைய நிலைமை தீவிரமாக உள்ளது. எனவே நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து அனைத்து தரப்பினரும் அரசுக்கு ஒத்துழைக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.குடிமக்களின் உயிரை பாதுகாக்க சில கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசும் நமக்கு உதவுகிறது. மராட்டியத்தின் தற்போதைய நிலைமை குறித்து நான் மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷவர்தனுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். நிலைமையை சமாளிக்க மராட்டியம் மற்றும் பிற அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு துணை நிற்கும் என அவர் உறுதியளித்துள்ளார்.

வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மராட்டியத்தில் உள்ள சுகாதார ஊழியர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகின்றனர். நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் வைரஸ் பரவல் சங்கிலியை உடைக்க அரசு சில கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 376 பேர் பலி
மராட்டியத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 376 பேர் உயிரிழந்தனர்.
2. புதிதாக 1,320 பேருக்கு கொரோனா: ஓமனில் மொத்த கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 68 ஆயிரத்தை கடந்தது
ஓமன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 5 ஆக உயர்ந்துள்ளது.
3. அமீரகத்தில் ஒரே நாளில் 2,112 பேருக்கு கொரோனா; 2,191 பேர் குணமடைந்தனர்
அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 78 ஆயிரத்து 131 ஆக உயர்ந்தது.
4. மதுரையில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? - சுகாதாரத்துறை துணை இயக்குனர் விளக்கம்
மதுரையில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் விளக்கம் அளித்து உள்ளார்.
5. கொரோனாவின் தாக்கத்தை குறைக்க தீவிர பரிசோதனை; முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்
கொரோனாவின் தாக்கத்தை குறைக்க உமிழ்நீர் பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று நாராயணசாமி கூறினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை