மாவட்ட செய்திகள்

மராட்டியத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 376 பேர் பலி + "||" + In a single day in the Maharashtra, 376 people were killed by the corona

மராட்டியத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 376 பேர் பலி

மராட்டியத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 376 பேர் பலி
மராட்டியத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 376 பேர் உயிரிழந்தனர்.

தாராவியில் புதிதாக 99 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.

பலி அதிரடி உயர்வு

மராட்டியத்தில் நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை நெருங்கி இருந்த நிலையில், நேற்று பாதிப்பு சற்று குறைந்தது. அதன்படி புதிதாக 56 ஆயிரத்து 286 பேர் நோய் தொற்றுக்கு ஆளானார்கள். இதனால் இதுவரையிலான பாதிப்பு எண்ணிக்கை 32 லட்சத்து 29 ஆயிரத்து 547 ஆக உயர்ந்தது.

அதேவேளையில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை புதிய உச்சம் அடைந்தது. அதன்படி ஒரே நாளில் 376 பேர் பலியானார்கள். இதுநாள் வரையில் இதுவே அதிகப்பட்ச பலி எண்ணிக்கையாக கருதப்படுகிறது.

தற்போது மாநிலத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் அதிரடியாக உயர்ந்து உள்ளது. அதன்படி 5 லட்சத்து 21 ஆயிரத்து 317 பேர் சிசிச்சை பெற்று வருகின்றனர்.

தாராவி

மும்பையிலும் நேற்று பாதிப்பு சற்று குறைந்தது. நேற்று புதிதாக 8 ஆயிரத்து 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 91 ஆயிரத்து 698 ஆக உயர்ந்தது. இதே போல மும்பையில் கொரோனா தொற்றினால் 23 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆயிரத்து 874 ஆக அதிகரித்தது.

தாராவியில் நேற்று புதிதாக 99 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 474 ஆக அதிகரித்து உள்ளது. தாதரில் 121 பேருக்கும், மாகிமில் 134 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதேபோல மும்பை புறநகர் பகுதிகளான வசாய்-விரார் மாநகராட்சியில் 464 பேருக்கும், தானே மாநகராட்சியில் ஆயிரத்து 829 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னையை அடுத்த பள்ளிக்கரணை அருகே 5 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது
சென்னையை அடுத்த பள்ளிக்கரணை அருகே 5 கிலோ கஞ்சாவுடன் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
2. கொரோனாவால் கடுமையான பாதிப்பு; மராட்டியத்துக்கு உதவ மத்திய அரசு உறுதியளித்துள்ளது: சரத்பவார்
கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட மராட்டியத்திற்கு உதவுவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறினார்.
3. புதிதாக 1,320 பேருக்கு கொரோனா: ஓமனில் மொத்த கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 68 ஆயிரத்தை கடந்தது
ஓமன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 5 ஆக உயர்ந்துள்ளது.
4. அமீரகத்தில் ஒரே நாளில் 2,112 பேருக்கு கொரோனா; 2,191 பேர் குணமடைந்தனர்
அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 78 ஆயிரத்து 131 ஆக உயர்ந்தது.
5. சென்னை வந்த அரசு பஸ்-லாரி மோதல் டிரைவர் உள்பட 3 பேர் உடல் நசுங்கி பலி 21 பேர் படுகாயம்
சிதம்பரம் அருகே அரசு பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ் டிரைவர் உள்பட 3 பேர் உடல் நசுங்கி பலியாகினா். மேலும் 21 பேர் படுகாயம் அடைந்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை