மாவட்ட செய்திகள்

கைதான போலீஸ் அதிகாரியின் சர்ச்சை கடிதம் மூலம் மராட்டிய கூட்டணி அரசை பலவீனப்படுத்த பா.ஜனதா அழுக்கு அரசியல் செய்கிறது; சிவசேனா காட்டம் + "||" + The BJP is doing dirty politics to weaken the maharashtra coalition government through the controversial letter of the arrested police officer; Shiv Sena

கைதான போலீஸ் அதிகாரியின் சர்ச்சை கடிதம் மூலம் மராட்டிய கூட்டணி அரசை பலவீனப்படுத்த பா.ஜனதா அழுக்கு அரசியல் செய்கிறது; சிவசேனா காட்டம்

கைதான போலீஸ் அதிகாரியின் சர்ச்சை கடிதம் மூலம் மராட்டிய கூட்டணி அரசை பலவீனப்படுத்த பா.ஜனதா அழுக்கு அரசியல் செய்கிறது; சிவசேனா காட்டம்
கைதான போலீஸ் அதிகாரி சச்சின் வாசே கடிதம் மூலம் மந்திரி மீது குற்றச்சாட்டி இருப்பது, மராட்டிய அரசை பலவீனப்படுத்த பா.ஜனதா அழுக்கு அரசியலை செய்கிறது என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார்.

மீண்டும் அதிர்வலை

ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தரக்கோரி மும்பை போலீசாரை கட்டாயப்படுத்திய புகாரில் மராட்டிய உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்தநிலையில் அம்பானி வீட்டு அருகே வெடிகுண்டு கார் சிக்கிய வழக்கில் கைதான போலீஸ் அதிகாரி சச்சின் வாசேயை நேற்று முன்தினம் கோர்ட்டில் என்.ஐ.ஏ. ஆஜர்படுத்திய போது, அவர் நீதிபதியிடம் கொடுத்த கடிதம் மராட்டிய அரசியலில் மீண்டும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அவர் அந்த கடிதத்தில், பதவி இழந்த மந்திரி அனில் தேஷ்முக் மீதும், சிவசேனாவை சேர்ந்த போக்குவரத்து மந்திரி அனில் பரப் மீதும் முறைகேடு புகார்களை கூறியிருந்தார்.

இதுகுறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

அழுக்கு அரசியல்

சிறை கைதியிடம் இருந்து கடிதம் எழுதி வாங்கும் புதிய போக்கு தற்போது நிலவி வருகிறது. இதற்கு முன்பு நாடு எப்போதும் இதுபோன்றதொரு அழுக்கு அரசியல் நடத்தப்படுவதை பார்த்ததில்லை.அரசியல் கட்சியின் தொழில் நுட்ப பிரிவு மற்றும் விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி ஒருவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கப்படுகிறது. இதற்கு சிறை கைதிகளின் கடிதங்களும் பயன்படுத்தப்படுகிறது.மகா விகாஷ் அகாடி கட்சியின் உறுதித்தன்மையை பலவீனப்படுத்தவும், சீர்குலைக்கவும் எடுக்கப்படும் இத்தகைய முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெறாது.

எனக்கு அனில் பரப்பை நன்றாக தெரியும். அவர் ஒரு தீவிரமான சிவசேனா தொண்டர். பால் தாக்கரே பெயரில் ஒருபோதும் அவர் தவறாக சத்தியம் செய்ய மாட்டார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. மதவாத கூட்டணி பா.ஜ.க.வை மக்கள் புறக்கணிப்பார்கள்; நாராயணசாமி பேட்டி
மதவாத பா.ஜ.க. அணியை மக்கள் புறக்கணித்து மதசார்பற்ற கூட்டணியை வெற்றிபெறச் செய்வார்கள் என்று நாராயணசாமி கூறினார்.
2. பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால் காவிமயமாகி விடும்; முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தாக்கு
பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால் காவிமயமாகி விடும் என முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
3. புனே மாவட்டத்தில் தினசரி 12 மணி நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது; பஸ் நிறுத்தப்பட்டதை கண்டித்து பா.ஜனதா போராட்டம்
புனே மாவட்டத்தில் தினசரி 12 மணி நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. பஸ் சேவை நிறுத்தப்பட்டதை எதிர்த்து பா.ஜனதா போராட்டம் நடத்தியது.
4. ஓய்வுபெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்குக்கு அனுமதி கோரி கடிதம்
ஓய்வுபெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்குத் தொடர அனுமதி கோரி சொலிசிட்டர் ஜெனரலுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
5. தமிழக கோவில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலினுக்கு ஜக்கி வாசுதேவ் கடிதம்
தமிழக கோவில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும், அதற்கு 3 கோடி மக்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர் என்றும் எடப்பாடி பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு ஜக்கி வாசுதேவ் கடிதம் எழுதி உள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை