கும்மிடிப்பூண்டி அருகே ரூ.5 லட்சம் குட்கா பதுக்கிய வடமாநில வாலிபர் கைது


கும்மிடிப்பூண்டி அருகே ரூ.5 லட்சம் குட்கா பதுக்கிய வடமாநில வாலிபர் கைது
x
தினத்தந்தி 9 April 2021 5:52 AM GMT (Updated: 9 April 2021 5:52 AM GMT)

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அடுத்த பண்பாக்கம்-குருதானமேடு சாலையில் சாலமன் என்பவருக்கு சொந்தமான வயல்வெளியுடன் கூடிய மோட்டார் பம்ப் செட்டிற்கான குடோன் உள்ளது.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அடுத்த பண்பாக்கம்-குருதானமேடு சாலையில் சாலமன் என்பவருக்கு சொந்தமான வயல்வெளியுடன் கூடிய மோட்டார் பம்ப் செட்டிற்கான குடோன் உள்ளது. வாடகைக்கு விடப்பட்டிருந்த இந்த குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை பதுக்கி வைத்து கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை, ஆரம்பாக்கம் மற்றும் மாதர்பாக்கம் பகுதிகளுக்கு விற்பனைக்கு எடுத்து செல்வதாக கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேசுக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து நேற்று இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அதிரடியாக சோதனை செய்தனர். பம்ப் செட்டிற்கான அந்த குடோனில் 20 மூட்டைகளில் 1 டன் எடை கொண்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.

இது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பம்பு செட் குடோனில் குட்காவை பதுக்கி வைத்திருந்த கும்மிடிப்பூண்டி வி.எம்.தெருவில் வசித்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரபத்சிங் (வயது 23) என்பவரை கைது செய்தனர். மேலும் குட்கா மூட்டைகளையும் போலீசார் கைப்பற்றினர்.

 


Next Story