வேடசந்தூரில் மரத்தில் மோதிய லாரி


வேடசந்தூரில் மரத்தில் மோதிய லாரி
x
தினத்தந்தி 9 April 2021 4:50 PM IST (Updated: 9 April 2021 4:59 PM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூரில் மரத்தில் லாரி மோதியது.

வேடசந்தூர்:
வேடசந்தூர் தாலுகா டி.கூடலூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு பால் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி புறப்பட்டது. லாரியை டி.கூடலூரை சேர்ந்த தங்கவேல் (வயது 51) என்பவர் ஓட்டினார். நேற்று அதிகாலையில் வேடசந்தூரில் ஆத்துமேட்டில் திண்டுக்கல் ரோட்டில் லாரி சென்றுகொண்டிருந்தது. அப்போது லாரி எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ரோட்டோரம் கடைகளுக்கு முன் இருந்த புளியமரத்தில் மோதியது. 
இதில் லாரியின் முன்பகுதி நொறுங்கியது. மேலும் டிரைவர் தஙகவேல் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 
இதனிடையே லாரி மோதியதில் புளியமரத்தின் கிளைகள் முறிந்து ரோட்டில் விழுந்ததால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. விபத்து தொடர்பாக வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பகல் நேரத்தில் இந்த விபத்து நடந்திருந்தால் கடைகளுக்கு வந்தவர்கள் மீது மோதி பெரும் விபத்து நடந்திருக்கும். அதிர்ஷ்டவசமாக அதுபோல நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது



Next Story