மாநில செய்திகள்

தண்ணீர் மற்றும் மோர் பந்தல் அமைத்து மக்கள் தாக்கம் தணிக்க வேண்டும் - தொண்டர்களுக்கு அதிமுக தலைமை வேண்டுகோள் + "||" + Provied Butter Milk and Water to Public ADMK Request Party Workers to Serve People

தண்ணீர் மற்றும் மோர் பந்தல் அமைத்து மக்கள் தாக்கம் தணிக்க வேண்டும் - தொண்டர்களுக்கு அதிமுக தலைமை வேண்டுகோள்

தண்ணீர் மற்றும் மோர் பந்தல் அமைத்து மக்கள் தாக்கம் தணிக்க வேண்டும் - தொண்டர்களுக்கு அதிமுக தலைமை வேண்டுகோள்
கொரோனா தொற்று அதிகரிப்பதால் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முககவசம் உள்ளிட்டவற்றையும் அதிமுக தொண்டர்கள் வழங்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமெடுக்கத்தொடங்கியுள்ளது. மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 4 ஆயிரத்து 276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில்  கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 15 ஆயிரத்து 386 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக நாளை முதல் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தவும் வாய்ப்பு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் மட்டுமின்றி தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடைவெயிலின் தாக்கமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், கோடை வெயில் காரணமாக தண்ணீர் மற்றும் மோர் பந்தல்கள் அமைத்து மக்களின் தாகத்தை தணிக்க வேண்டும் என்று அதிமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

மேலும், கொரோனா தொற்று அதிகரிப்பதால் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் அக்கட்சி தலைமை இன்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கருத்துக்கணிப்புகளை நம்ப வேண்டாம்: தொண்டர்களுக்கு அதிமுக தலைமை வேண்டுகோள்
வேட்பாளர்கள் மற்றும் தலைமை முகவர்கள் அனைவரும் வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிவடைந்த பின்னரே வெளியே வரவேண்டும் என அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.
2. அதிமுக, பாமக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவளித்து தமிழகத்தில் நல்லாட்சி தொடரச் செய்ய வேண்டும் - டாக்டர் ராமதாஸ் அறிக்கை
அதிமுக, பாமக மற்றும் அவற்றின் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவளித்து தமிழகத்தில் நல்லாட்சி தொடரச் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
3. அதிமுகவிற்கும், திமுகவிற்கும் சரியான தலைமைகள் இல்லை - ராதிகா சரத்குமார் பேட்டி
அதிமுகவிற்கும், திமுகவிற்கும் சரியான தலைமைகள் இல்லை என்று ராதிகா சரத்குமார் கூறினார்.
4. தேனி- போடியில் அதிமுக பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
அதிமுகவை சேர்ந்த தேனி மாவட்ட அம்மா மாவட்ட பேரவை பொருளாளர் குறிஞ்சிமணியின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
5. ஜனநாயகமுறையில் இயங்கும் அதிமுக அமைப்பை சசிகலா ஏற்றுக்கொண்டால் அவரை ஏற்றுகொள்வது குறித்து பரிசீலிக்கலாம் -ஓ.பன்னீர்செல்வம் - வீடியோ
அதிமுக அமைப்பை ஏற்றுக்கொண்டால் சசிகலாவை ஏற்றுக்கொள்வது குறித்து பரிசீலிக்கலாம் என ஓ.பன்னீர்செல்வம் தந்தி டிவிக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.