ஆறுமுகநேரியிலு்ள்ள வாக்குச்சாவடிகளில் கிருமிநாசினி தெளிப்பு


ஆறுமுகநேரியிலு்ள்ள வாக்குச்சாவடிகளில் கிருமிநாசினி தெளிப்பு
x

ஆறுமுகநேரியிலுள்ள வாக்குச்சாவடிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

ஆறுமுகனேரி:
தமிழகத்தில் நேற்று முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், கடந்த 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற வாக்குச்சாவடிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த வகையில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறுமுகநேரியில் 33 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இ்ந்த வாக்குச்சாவடிகளில் நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி கணேசன் அறிவுரையின் பேரில் சுகாதார மேற்பார்வையாளர் கார்த்திக், மற்றும் நகர பஞ்சாயத்து பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Next Story