கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம்
கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம்
கோவை
கோவை முத்தண்ணன் குளத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம் கிடந்தது. கொலை செய்து உடல் வீசப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளத்தில் ஆண் பிணம்
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் முத்தண்ணன் குளம் உள்ளது. நேற்று காலை குளக்கரையோரத்தில் பொதுமக்கள் நடை பயிற்சி செய்தனர். அப்போது அங்கு குளத்தில் ஆண் பிணம் மிதந்தது.
இது குறித்த தகவலின் பேரில் ஆர்.எஸ்.புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
குளத்தில் பிணமாக கிடந்தவருக்கு 45 வயது இருக்கும். அவரது கழுத்து பகுதி அறுக்கப்பட்டு இருந்தது. அவர் அரைக்கை சட்டை மற்றும் அரைக்கால் டவுசர் அணிந்து இருந்தார். அவரது கையில் ஆறுமுகம் என்று பச்சை குத்தப்பட்டு இருந்தது.
கொலை செய்யப்பட்டாரா?
ஆனால் பிணமாக மிதந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரிய வில்லை. அவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு குளத்தில் வீசப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், முத்தண்ணன் குளக்கரையோரம் மாலை நேரங்களில் அமர்ந்து மது அருந்துபவர்களை அவ்வப்போது கண்டித்து அனுப்புவோம்.
அங்கு மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டு, குளத்தில் வீசப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.
Related Tags :
Next Story