ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவை
கோவை மாநகராட்சியில் தொற்று பாதித்தவரின் வீட்டை சுற்றி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. 600 படுக்கைகளுடன் கொடிசியாவில் சிகிச்சை மையம் தயாராகி வருகிறது.
கொரோனா பரிசோதனை
கோவையில் கொரோனா தொற்று தற்போது படிப்படியாக அதிகரித்து வருகிறது. தமிழக அளவில் கொரோனா தொற்று பாதிப்பில் சென்னைக்கு அடுத்தப்படியாக கோவை உள்ளது. இதனால் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் தீவிரப்படுத்தி உள்ளது.
முன்பு கொரேனா தொற்று பாதித்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது கொரோனா அதிகரித்து வருவதால் தொற்று பாதித்தவரின் வீட்டை சுற்றி உள்ளவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
இது குறித்து சுகாதார துறையினர் கூறியதாவது
மருத்துவ குழு
கொரோனா தொற்று பாதித்தவர்களை விரைவாக கண்டறிந்து தனிமைப்படுத்துவதன் மூலம் மற்றவர்களுக்கு தொற்று பரவுவதை தடுக்க முடியும்.
எனவே தொற்று பாதித்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமின்றி அவர் வசித்த வீடுகளை சுற்றி உள்ளவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
இதுதவிர சிங்காநல்லூர், காந்திபுரம், உக்கடம் உள்ளிட்ட பஸ் நிலை யங்களில் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் பணியில் மருத்துவ குழு ஈடுபட்டு உள்ளது.
5 பேருக்கு கொரோனா
தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், தனிமைப்படுத்தப்படும் பகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கோவை மாநகராட்சியில் 41 பகுதிகளும், ஊரக பகுதியில் 31 இடங்கள் என மாவட்டத்தில் மொத்தம் 75 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன.
கோவை கருப்ப கவுண்டர் வீதியில் ஓரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரு க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
600 படுக்கைகள்
தொற்று பாதித்தவர்களின் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். தனிநபர் இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் 600 படுக்கைகளுடன் கொடிசியா சிகிச்சை மையம் மீண்டும் தயார் செய்யப்பட்டு உள்ளது. இங்கு நாளை (இன்று) முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை சிகிச்சைக்காக அனுமதிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story