திருவெண்ணெய்நல்லூர் அருகே தீ விபத்து: பண்ணையில் 2,350 கோழி குஞ்சுகள் கருகி செத்தன
கோழி குஞ்சுகள் செத்தன
அரசூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே பல்லரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 40). இவர் அதே ஊரில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அதிகாலையில் கோழிப்பண்ணை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இதுபற்றி திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் நிலைய அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். ஆனாலும் பண்ணையில் இருந்த 2,350 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி செத்தன. மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து நடைபெற்று இருக்கலாம் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் இது குறித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story