வருகிற 15ம் தேதி முதல் விசைப்படகு, இழுவைப்படகுகள் மீன்பிடிக்க தடை கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
வருகிற 15ம் தேதி முதல் விசைப்படகு, இழுவைப்படகுகள் மீன்பிடிக்க தடைவிதிக்கப்படுவதாக, கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 15ந் தேதி(வியாழக்கிழமை) முதல் 61 நாட்கள் விசைப்படகு, இழுவைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
இனப்பெருக்கம்
தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983ன் கீழ் தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் திருவள்ளுர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி நகரம் வரை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ந் முதல் ஜூன் மாதம் 14ந் தேதி வரை மீன் இனப்பெருக்க காலமாக கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில், மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கொண்டு கடலில் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு அரசாணை வழங்கப்பட்டு உள்ளது.
தடை
எனவே, அரசாணையின்படி இந்த ஆண்டு வருகிற 15ந் தேதி(வியாழக்கிழமை) முதல் ஜூன் மாதம் 14ந் தேதி வரை 61 நாட்கள் தூத்துக்குடி மாவட்ட மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க, செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story