கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் ஊட்டி கலெக்டர் அலுவலக அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி கூறியதாவது.
ஊட்டி,
நீலகிரியில் தேயிலை எஸ்டேட், தொழிற்சாலைகளில் அதிக தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். தொழிலாளர் நலத்துறையினர் அவர்களை கணக்கெடுத்து தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். அரசு பஸ்களில் டிரைவர்கள், கண்டக்டர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தாததால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
பயணிகளை இருக்கைகளில் அமர வைத்து இயக்க வேண்டும். பஸ்களில் நின்று கொண்டு பயணம் செய்யக்கூடாது. தொற்று பரவும் வகையில் முககவசம் அணியாமல் செல்லும் நபர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, சப்-கலெக்டர்கள் மோனிகா, ரஞ்சித்சிங், கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story