63.76 அடியாக குறைந்த வைகை அணை நீர்மட்டம்
நீர்வரத்து இல்லாததால் வைைக அணையின் நீர்மட்டம் 63.76 அடியாக குறைந்தது.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ததால், வைகை அணை தனது முழுக்கொள்ளளவை எட்டியது. மேலும் இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதி வரையில் மழை தொடர்ந்ததால் அணைக்கான நீர்வரத்து கணிசமாக இருந்தது. இதன்காரணமாக வைகை அணை நீர்மட்டம் கடந்த 2 மாதங்களாக 64 அடியாகவே நீடித்து வந்தது.
இந்தநிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை பெய்யவில்லை. மேலும் கோடை வெயிலும் சுட்டெரித்து வருவதால் வைகை அணைக்கான நீர்வரத்து அடியோடு நின்றுவிட்டது. அதே நேரத்தில் அணையில் இருந்து மதுரை, சேடப்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி, பெரியகுளம் பகுதிகளின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 72 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் வைகை அணையில் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. தற்போது வைகை அணை நீர்மட்டம் 63.76 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story