கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் பொதுமக்கள் அலட்சியம்
கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் பொதுமக்கள் அலட்சியம் செய்து வருகின்றனர்
பனைக்குளம்,
கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் பொதுமக்கள் அலட்சியம் செய்து வருகின்றனர்.
கட்டுப்பாடு
ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதி கிராமங்களில் வசிக்கக்கூடிய மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக ஒரே இடத்தில் அமர்ந்து கொள்வதும், மேலும் கிராமங்களில் உள்ள மீன்மார்க்கெட், காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் முககவசம் அணியாமல் செல்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த பகுதியில் வசிப்பவர்கள் சுயக்கட்டுப்பாட்டை கடைபிடிக் காதவர்களாக சாலைகளில் உள்ள டீக்கடை, உணவகங்களில் அமர்ந்து கூட்டம் கூடி கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
இதனால் கொரோனா தொற்று அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. கடந்த காலங்களில் கிராம மக்கள் மிகவும் கட்டுக்கோப்புடன் இருந்து வந்த நிலையில், தற்போது இந்த நிலை மாறி வருகிறது. இதனால் கொரோனாவால் புதிதாக பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரடியாக மக்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். மேலும் பேருந்துகளில் செல்லக்கூடிய பயணிகள் முகக்கவசம் இல்லாமல் செல்லக்கூடாது எனவும், பஸ் நிலையத்தில் நிற்கக்கூடிய பயணிகள் முகக்கவசம் இன்றி பஸ்களில் ஏறக்கூடாது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார்.
அலட்சியம்
மேலும் கிராமங்களில் உள்ள ஊராட்சி நிர்வாகம், சுகாதாரத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தும் பொதுமக்கள் அரசு அறிவித் துள்ள கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர். மேலும் பஸ்களில் அதிகமான பயணிகளை கிராமப்புறத்தில் இருந்து ராமநாதபுரம் நகருக்கு ஏற்றிச்செல்லும் நிலை யும் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் தொடர்கிறது.
எனவே சுகாதாரத்துறையினர் கிராமங்கள்தோறும் உள்ள மீன் விற்பனை கூடங்கள், காய்கறி மார்க்கெட்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து பொதுமக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story