திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்கு வருபவர்கள் வீடியோ கேமராவால் பதிவு செய்யப்பட்டு வருகிறார்கள்.
திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்கு வருபவர்கள் வீடியோ கேமராவால் பதிவு செய்யப்பட்டு வருகிறார்கள்.
திருப்பூர்,
திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்கு வருபவர்கள் வீடியோ கேமராவால் பதிவு செய்யப்பட்டு வருகிறார்கள்.
வாக்கு எண்ணும் மையம்
திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, தெற்கு, அவினாசி, பல்லடம், காங்கேயம், மடத்துக்குளம், தாராபுரம், உடுமலை ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 8 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த 6-ந் தேதி விறு, விறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 3,343 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த வாக்குச்சாவடிகளில் பணியாற்ற தேர்தல் பணியாளர்களும் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
இதன் காரணமாக எந்த ஒரு சல சலப்பும் இன்றி தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது. இதுபோல் 8 தொகுதிகளிலும் இருந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான பல்லடம் ரோட்டில் உள்ள எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக்கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு, தொகுதிகள் வாரியாக பிரிக்கப்பட்டு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டன.
வீடியோ கேமரா மூலம்
இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுதவிர கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டும் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. இந்நிலையில் வாக்கு எண்ணும் மையமான எல்.ஆர்.ஜி. கல்லூரிக்கு அரசியல் கட்சியினர், பல்வேறு கட்சி முகவர்களும் வந்து செல்கின்றனர்.
இதன் காரணமாக வாக்கு எண்ணும் மையத்தில் பதிவேடு மூலம் வருகிறவர்களின் விவரம் மற்றும் அவர்கள் எதற்காக வருகிறார்கள்? என்பது உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. இதுபோல் நுழைவு வாயில் பகுதியில் வீடியோ கேமரா மூலமும் போலீசார் பதிவு செய்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story