மாவட்ட செய்திகள்

கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை உயர்வு + "||" + Rising tomato prices

கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை உயர்வு

கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை உயர்வு
கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை உயர்ந்தது.
கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை உயர்ந்தது. 

காய்கறி சந்தை 

கிணத்துக்கடவில் உள்ள தினசரி காய்கறி சந்தைக்கு கிணத்துக்கடவு மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள். 

அவற்றை வாங்க பொள்ளாச்சி, கோவை மற்றும் பல இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்து அவற்றை வாங்கிச்செல்கிறார்கள். 

தக்காளி விலை உயர்வு 

இந்த சந்தையில் கடந்த வாரத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.4-க்கும் குறைவாக விற்பனை செய்யப்பட்டது. 

ஆனால்  அதன் விலை அதிகரித்து கிலோ ரூ.7-க்கு (மொத்த விலை) விற்கப்பட்டது.  தமிழ்புத்தாண்டு காரணமாக காய்கறிகளின் தேவை அதிகரித்து உள்ளதே தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. 

அதுபோன்று வாழைகளின் விலையும் உயர்ந்து காணப்பட்டது. 

விவசாயிகள் மகிழ்ச்சி 

நேந்திரன் (ஒரு கிலோ) ரூ.25, செவ்வாழை ரூ.35 கற்பூரவள்ளி ரூ.30, பூவன் ரூ.35-க்கும் ஏலம் போனது. அதேபோல் பச்சை மிளகாய்  (ஒரு கிலோ) ரூ.35, பீர்க்கன்காய் ரூ.30, பீட்ரூட் ரூ.12, பாகற்காய் ரூ.35, சுரைக்காய் ரூ.8, வெண்டைக்காய் ரூ.20, அவரைக்காய் ரூ.25, புடலங்காய் ரூ.10, சின்ன வெங்காயம் ரூ.35, பொரியல் தட்டை பயிறு ரூ.15, கோவக்காய் ரூ.20 என ஏலம் போனது.  இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. பாலக்கோடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைவால் தக்காளி விலை உயர்வு
பாலக்கோடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்ததால் தக்காளி விலை உயர்ந்தது.