அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட குவிந்த பொதுமக்கள்


அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 9 April 2021 11:04 PM IST (Updated: 9 April 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள்.

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள். 

பரவல் அதிகரிப்பு 

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அதுபோன்று கிணத்துக்கடவு பகுதியிலும் அதன் பரவல் அதிகமாக உள்ளது. 

இதுவரை 331 பேருக்கு பாதிப்பு இருந்தது. இதில் 20 பேர் மட்டுமே அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  ஒரே நாளில் 6 பேருக்கு கொரோனா உறுதியானது. 

தடுப்பூசி போட குவிந்தனர் 

கொரோனா பரவலை தடுக்க 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. 

அத்துடன் நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.

இந்த நிலையில்  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அங்கு ஏராளமானோர் குவிந்தனர். 

அவர்கள் அனைவருக்கும் வட்டார மருத்துவ அதிகாரி சித்ரா மேற்பார்வையில் டாக்டர் சமீதா முன்னிலையில் தடுப்பூசி போடப்பட்டது. 

150 பேருக்கு போடப்பட்டது 

இது குறித்து வட்டார மருத்துவ அதிகாரி சித்ரா கூறும்போது, நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  மட்டும் 150 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. 

தற்போது கொரோனா பரவல் அதிகரித்து உள்ளதால் தடுப்பூசி போட தானாகவே பலர் முன்வந்து உள்ளனர். இதுவரை இங்கு 1,909 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்றார்.


Next Story