பள்ளிகளில் கிருமி நாசினி தெளிப்பு
வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட்ட பள்ளிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது.
பொள்ளாச்சி
வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட்ட பள்ளிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது.
பள்ளிகளில் செயல்பட்ட வாக்குச்சாவடிகள்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக அந்தந்த தொகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு அலுவலகங்கள் வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட்டன.
கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருக்கிறது.
இதற்கிடையில் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு வருகிற 3-ந் தேதி முதல் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.
இதன் காரணமாக அவர்களுக்கு நேரடி வகுப்புகள் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகின்றன.
கிருமி நாசினி தெளிப்பு
இந்த நிலையில் பள்ளிகளில் வாக்குச்சாவடிகள் செயல்பட்டதால் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அதன்படி பள்ளிகள் முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி நடந்தது.
பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் ஆணையாளர் காந்திராஜ் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர்கள் மேற்பார்வையில் பள்ளிகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
இதேபோன்று ஒன்றிய, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி நடந்தது.
ஒப்படைப்பு
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, சட்டமன்ற தேர்தலையொட்டி பொள்ளாச்சி தொகுதிகளில் 318 வாக்குச்சாவடிகளும், வால்பாறையில் 294 வாக்குச்சாவடியும் அமைக்கப்பட்டு இருந்தன.
இதில் பெரும்பாலான வாக்குச்சாவடிகள் பள்ளிகளில் செயல்பட்டன. பிளஸ்-2 மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படுவதால், வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்து ஒப்படைக்கப்பட்டது என்றனர்.
Related Tags :
Next Story