லாரியில் திடீர் தீ விபத்து


லாரியில் திடீர் தீ விபத்து
x
தினத்தந்தி 9 April 2021 11:40 PM IST (Updated: 9 April 2021 11:40 PM IST)
t-max-icont-min-icon

லாரியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

நொய்யல்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த ஞானசேகரன் (வயது 50). லாரி டிரைவர். இவர் சேலத்தில் இருந்து தூத்துக்குடிக்கு தேங்காய் மஞ்சு பெட்டிகளை ஏற்றிக்கொண்டு சேலம்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டிருந்தார். அப்போது கரூர் அருகே தளவாபாளையத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி அருகே லாரி சென்று கொண்டிருந்தபோது திடீரென லாரியின் என்ஜினில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் புகைமூட்டம் வேகமாக வந்தது. உடனடியாக டிரைவர் லாரியை நிறுத்தி கீழே இறங்கி உயிர் தப்பினார். இது குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையம் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரியில் வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு அருகில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த தீயணைப்பு வண்டிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து லாரியில் எரிந்து கொண்டிருந்த தீயை ண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் லாரியின் என்ஜின் முழுவதும் எரிந்து நாசமானது.

Next Story