மாரியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா நடைபெற்றது.
சாத்தூர்.
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா நடைபெற்றது.
மாரியம்மன் கோவில்
சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பங்குனி மாத பொங்கல் திருவிழா நடைபெற்றது.
கடைசி வெள்ளிக்கிழமை என்பதாலும், பொங்கல் திருவிழா என்பதாலும் கோவிலுக்கு சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அபிஷேகம்
முன்னதாக அதிகாலை முதல் அம்மனுக்கு பால், பன்னீர், தேன், விபூதி, சந்தனம், பஞ்சாமிர்தம், மஞ்சள், இளநீர் உள்பட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. கொரோனா அறிவுறுத்தல் காரணமாக இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர்.
தடுப்பு நடவடிக்கை
விழாவையொட்டி பக்தர்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
கோவில் நிர்வாகம் சார்பில் உடல் வெப்ப பரிசோதனை மற்றும் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் உதவி ஆணையர் கருணாகரன், ராமமூர்த்தி பூசாரி, பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story