வீட்டு கதவை உடைத்து பணம் திருட்டு


வீட்டு கதவை உடைத்து பணம் திருட்டு
x
தினத்தந்தி 10 April 2021 12:49 AM IST (Updated: 10 April 2021 12:49 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் வீட்டு கதவை உடைத்து பணம் திருடப்பட்டது. ஓட்டு போட சொந்த ஊர் சென்றவர் இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்தார்.

காரைக்குடி,

காரைக்குடியில் வீட்டு கதவை உடைத்து பணம் திருடப்பட்டது. ஓட்டு போட சொந்த ஊர் சென்றவர் இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்தார்.

ஓட்டு போட சொந்த ஊர் சென்றார்

காரைக்குடி அய்யனார்புரம் பகுதியில் வசித்து வருபவர் ஆரோக்கியதாஸ் (வயது 46).இவர் திருமயம் பெல் தொழிற்சாலையில் டெக்னிஷியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது சொந்த ஊர் கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள தோமையார் நகர். இவர் சட்டசபை  தேர்தலில் ஓட்டு போடுவதற்காக தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தோடு சொந்த ஊர் சென்று விட்டார். 2 நாட்களுக்கு முன் காரைக்குடி திரும்பினார்.

பணம் திருட்டு

அப்போது அவர்கள் வீட்டின் பக்கவாட்டு கதவு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது படுக்கையறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் வீடெங்கும் சிதறிக்கிடந்தன. பீரோவில் வைத்திருந்த ரூ.65 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது.
 இதுகுறித்து ஆரோக்கியதாஸ் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஆரோக்கியதாஸ் வீட்டருகே வசிக்கும் பொன்னையா (29) என்பவரை கைது  செய்தனர். அவரிடம் இருந்த ரூ. 40 ஆயிரத்தை கைப்பற்றினர்.

Next Story