பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை
பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது
மதுரை
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மதுரையில் பெரியார் பஸ் நிலையம், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி உள்ளிட்ட இடங்களில் பஸ்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. மேலும், பணிமனைகளில் நிறுத்தப்பட்டுள்ள பஸ்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதுபோல், பஸ்களில் பயணம் செய்யும் முன்பு, பயணிகளின் உடல் வெப்பநிலையும் பரிசோதிக்கப்பட்டது. உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும்பட்சத்தில் அந்த பயணிகளுக்கு பஸ்சில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. முக கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மட்டுமே பஸ்சில் ஏற அனுமதி அளிக்கப்பட்டது. முககவசம் இல்லாமல் வருபவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். இது தவிர பெரியார் மற்றும் ஆரப்பாளையம் பஸ் நிலையங்களில் ஒலிபெருக்கி மூலம் பயணிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது.
Related Tags :
Next Story