கலியுக வரதராஜ பெருமாள் கோவில் கருடசேவை
கல்லங்குறிச்சியில் கலியுக வரதராஜ பெருமாள் கோவில் கருடசேவை நடைபெற்றது.
அரியலூர்:
அரியலூர் அருகே உள்ள கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் கடைசியில் நடைபெறும் கருட சேவை நிகழ்ச்சி நேற்று நடந்தது. பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். மகா தீபாராதனை முடிந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் கோவில் வாசலில் இருந்து மேளதாளம் முழங்க வாண வேடிக்கையுடன் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா நடந்தது. நான்கு வீதிகளிலும் பக்தர்கள் பெருமாளை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் ஆதின பரம்பரை தர்மகர்த்தாக்கள் ராமச்சந்திரன், ராமதாஸ், வெங்கடாஜலபதி ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story