பக்தர்கள் அலகுகுத்தி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்
மதுரை ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் அலகுகுத்தி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
மதுரை
மதுரை ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் அலகுகுத்தி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பங்குனி உற்சவ விழா
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த ேகாவில் பங்குனி உற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றுக்கு சென்று பால்குடம் எடுத்து வந்து அம்மனை தரிசித்தனர். மேலும் பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், பறவைகாவடி எடுத்தும் குழந்தைக்கு கரும்பு தொட்டில் அமைத்தும் பல்வேறு வேஷங்கள் போட்டுக்கொண்டு அம்மனை தரிசித்தனர்.
குறிப்பாக ஒவ்வொரு வருடமும் இக்கோவில் திருவிழா 5 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா தொற்று காரணமாக இன்று முதல் திருவிழா மற்றும் மத வழிபாடுகள் நடத்துவதற்கு அரசு தடைவிதித்துள்ளது.
நேர்த்திக்கடன்
திருவிழாவின் பல்வேறு நிகழ்ச்சிகளும் ஒரே நாளில் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி பால்குடம் எடுத்தல், ஊர் பொங்கல், அக்னிசட்டி எடுத்து வருதல், முளைப்பாரி எடுத்து வீதிஉலா சுற்றுதல், திருவிளக்கு பூஜை என 5 நாட்கள் நடைபெறக்கூடிய இந்த திருவிழா நேற்று ஒரே நாளில் நடந்தது. சிறுவர்கள் முதல் ெபரியவர்கள் வரை பால்குடம், அலகுகுத்தி ஊர்வலமாக வந்தனர். மீனாட்சி அம்மன் ேகாவில், ேநதாஜி ரோடு, கிரைம் பிராஞ்ச், மதுரை கல்லூரி ரோடு வழியாக பக்தர்கள் கோவிலை வந்தடைந்தனர்.
நேர்த்திக்கடன் செலுத்த வந்த பக்தர்கள் பறவை காவடி, புஷ்ப காவடி, பன்னீர் காவடி, வேல் காவடி, மயில் காவடி ஆகியவற்றை எடுத்து வந்தனர். மேலும் பல பக்தர்கள் மீனாட்சி அம்மன், பத்ரகாளி, வீரமாகாளியம்மன் உள்ளிட்ட தெய்வங்கள் போன்று வேடம் அணிந்து வந்தனர். அதிகாலையில் தொடங்கிய பக்தர்கள் நேர்த்திக்கடன் மதியம் 11 மணி வரை நடந்தது. இதன் காரணமாக கோவில் அமைந்திருந்த ஜெய்ஹிந்த்புரம் பகுதி திருவிழா கோலம் பூண்டிருந்தது. இரவு சக்தி கரகத்துடன் அம்மன் பூப்பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
பக்தர்கள் ஒரே நாளில் திருவிழாவில் கலந்து கொண்டதால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story