மேலும் 52 பேருக்கு கொரோனா


மேலும் 52 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 10 April 2021 1:56 AM IST (Updated: 10 April 2021 1:56 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினமும் 50-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் நேற்று மேலும் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதில் 9 பேர் பெண்கள் ஆவர். 

இதையடுத்து அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். 

அதேநேரம் 41 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து  வீடு திரும்பினர்.

 நேற்றைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டு 379 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Next Story