தேர்தல் முன்விரோதத்தில் இருதரப்பினர் மோதல்


தேர்தல் முன்விரோதத்தில் இருதரப்பினர் மோதல்
x
தினத்தந்தி 10 April 2021 2:02 AM IST (Updated: 10 April 2021 2:02 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை அருகே தேர்தல் முன்விரோதத்தில் இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 51 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

மானாமதுரை,

மானாமதுரை அருகே அரசகுளத்தை சேர்ந்தவர் பால்பாண்டி. இவருக்கும் மானாமதுரை பைபாஸ் ரோட்டை சேர்ந்த முருகேசனுக்கும் இடையே உள்ளாட்சி தேர்தல் காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இருவரும் வெவ்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் சட்டசபை தேர்தலின் போது வாக்குச்சாவடியில் பணியில் ஈடுபட்ட போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது இருவரது ஆதரவாளர்களும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
இதையடுத்து பால்பாண்டி கொடுத்த புகாரின்பேரில் முருகேசன், சங்கரலிங்கம் உள்ளிட்ட 33 பேர் மீதும், முருகேசன் கொடுத்த புகாரின்பேரில் பால்பாண்டி, பழனிகுமார் உள்ளிட்ட 18 பேர் மீதும் மானாமதுரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மொத்தம் 51 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Next Story