ஒரே பதிவு எண்ணில் 2 கார்கள்
சிவகங்கையில் ஒரே பதிவு எண்ணில் 2 கார்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அதோடு கார்களின் என்ஜின், சேஸ் நம்பரும் ஒன்றாக இருந்ததால் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் குழப்பம் அடைந்து உள்ளனர்.
சிவகங்கை
இந்த நிலையில் கடந்த வாரம் கன்னியாகுமரியை அடுத்த அழகாபுரத்தை சேர்ந்த முத்து துரை என்பவர் தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து காரை விலைக்கு வாங்கியுள்ளார். அதன் பின்னர் அவர் அந்த காரை தன்னுடைய பெயருக்கு பெயர் மாற்றம் செய்வதற்காக தூத்துக்குடியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் குறிப்பிட்ட கார் நம்பர் சிவகங்கையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முத்து கணேசன் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டது தெரிந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் தாங்கள் விலைக்கு வாங்கிய கார் அதனுடைய ஆர்.சி. புத்தகம் ஆகியவைகளுடன் சிவகங்கையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் வந்து விசாரித்தனர். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கல்யாண்குமார் முத்து கணேசின் கார் மற்றும் ஆர்.சி. புத்தகம் ஆகியவைகளை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு வரச்சொல்லி அவைகளை வாங்கி பார்த்துள்ளார்.
அப்போது அந்த இரண்டு கார்களும் ஒரே கார் நிறுவனத்தை சேர்ந்தது என்றும், காரின் நிறம், உமாதேவி என்ற உரிமையாளரின் பெயர் ஆகியவையும் ஒரே மாதிரியாக இருப்பதும் காரில் உள்ள என்ஜின் மற்றும் சேஸ் ஆகியவைகளின் நம்பரும் ஒரே மாதிரியாக இருப்பதும் தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் இதில் எந்த கார் உண்மையானது என்று தெரியாமல் குழம்பினார்கள்.
இதைத்தொடர்ந்து சிவகங்கை நகர் போலீசில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கல்யாண்குமார் புகார் அளித்தார். இதன்பேரில் நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் இரண்டு கார்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story