காளியம்மன் கோவில் திருவிழா
திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை மலைக்கிராமத்தில் காளியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை மலைக்கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் கடந்த 6-ந்தேதி திருவிழா தொடங்கியது.
விழாவைெயாட்டி அழகாயி ஊற்றிலிருந்து அம்மன் கரகம் அலங்கரித்து வாண வேடிக்கையுடன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
7-ந்தேதி காலை மாவிளக்கு, முளைப்பாரி எடுத்தல், அக்னிசட்டி எடுத்தல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.
மதியம் பொங்கல் வைத்து சக்தி கிடா வெட்டுதல் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இரவில் கரகாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து மஞ்சள் நீராட்டத்துடன் அம்மன் பூஞ்சோலை சென்றடைந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், பொதுமக்களும் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story