கேரள வாலிபருக்கு சிறைதண்டனை


சிறைதண்டனை
x
சிறைதண்டனை
தினத்தந்தி 10 April 2021 3:40 AM IST (Updated: 10 April 2021 3:40 AM IST)
t-max-icont-min-icon

கேரள வாலிபருக்கு சிறைதண்டனை

கோவை

கோவையை அடுத்த எட்டிமடை ரெயில் நிலையத்தில் நிலைய அலுவலராக பணியாற்றுபவர் அஞ்சனா. 

இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி இரவில் ரெயில் நிலையத்தில் பணியில் இருந்தபோது கத்தியை காட்டி நகையை பறிக்க முயன்றதாக கேரள மாநிலம் சொரனூரை சேர்ந்த பெரோஸ்கி (வயது 36) என்பவரை போத்தனூர் போலீசார் கைது செய்தனர்.

 பின்னர் அவர் மீதான வழக்கு கோவை 6-ம் எண் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்புக் கூறப்பட்டது. 

இதில் குற்றம் சாட்டப்பட்ட பெரோஸ்கிக்கு 1½ ஆண்டு சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு கே.ஆர்.கண்ணன் தீர்ப்புக்கூறினார். இதில் அரசு தரப்பில் வக்கீல் தங்கராஜ் ஆஜரானார்.

Next Story