ரமலான் மாதத்தை முன்னிட்டு இரவு 10 மணி வரை பள்ளிவாசல்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும் கலெக்டர் மெகராஜிடம் முஸ்லிம் அமைப்பினர் கோரிக்கை மனு


ரமலான் மாதத்தை முன்னிட்டு இரவு 10 மணி வரை பள்ளிவாசல்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும் கலெக்டர் மெகராஜிடம் முஸ்லிம் அமைப்பினர் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 10 April 2021 3:40 AM IST (Updated: 10 April 2021 3:40 AM IST)
t-max-icont-min-icon

ரமலான் மாதத்தை முன்னிட்டு இரவு 10 மணி வரை பள்ளிவாசல்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும் கலெக்டர் மெகராஜிடம் முஸ்லிம் அமைப்பினர் கோரிக்கை மனு

நாமக்கல்:
ரமலான் மாதத்தை முன்னிட்டு இரவு 10 மணி வரை பள்ளிவாசல்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் முஸ்லிம் அமைப்பினர் கோரிக்கை மனு அளித்தனர்.
கோரிக்கை மனு
தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை, நாமக்கல் மாவட்ட அனைத்து பள்ளிவாசல்களின் இமாம்கள் மற்றும் முத்தவல்லிகளின் கூட்டமைப்பு சார்பில் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்து உள்ளது. அதில் இரவு 8 மணி வரை மட்டும் வழிபாட்டு தலங்கள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முஸ்லிம்களின் புனித மாதமாகிய ரமலான் மாதம் வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு முஸ்லிம்கள் இரவு நேரத்தில் பள்ளிவாசல்களில் விசேஷ கூட்டுத் தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். எனவே இரவு நேர தொழுகை மேற்கொள்ளும் வகையில் இரவு 10 மணி வரை பள்ளிவாசல்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும். சுகாதாரத்துறை அறிவுறுத்திய வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க பள்ளிவாசல்களில் நிச்சயம் அறிவுறுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 
ரமலான் தொழுகை
இதுகுறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த நாமக்கல் பேட்டை அஞ்சுமனே இஸ்லாமிய ஜாமியா மஸ்ஜித்தின் முத்தவல்லி தவுலத்கான் கூறியதாவது:- கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருந்ததால் ரம்ஜான் மற்றும் பக்ரீத் பண்டிகைகளை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையாக வழிபாட்டுத்தலங்கள் இரவு 8 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி அளித்து உள்ளது. 
எனவே தமிழக அரசு எங்களது ரமலான் தொழுகையை இரவு 10 மணி வரை நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் நாமக்கல் மாவட்ட அனைத்து பள்ளிவாசல்களின் இமாம்கள் மற்றும் முத்தவல்லிகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
=========

Next Story