ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் கம்பத்துக்கு பெண்கள் புனித நீர் ஊற்றி வழிபாடு
ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் கம்பத்துக்கு பெண்கள் புனித நீர் ஊற்றி வழிபட்டனர்.
ஈரோடு
ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் கம்பத்துக்கு பெண்கள் புனித நீர் ஊற்றி வழிபட்டனர்.
குண்டம்-தேர் திருவிழா
ஈரோட்டில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வகையறா கோவில்களாக சின்ன மாரியம்மன் மற்றும் காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்கள் உள்ளது. இந்த கோவில்களில் குண்டம் மற்றும் தேர் திருவிழா கடந்த 6-ந்தேதி இரவு 9 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கடந்த 7-ந்தேதி இரவு 10 மணிக்கு 3 கோவில்களிலும் கம்பம் நடப்பட்டது.
இந்த கம்பங்களுக்கு பக்தர்கள் புனித நீர் ஊற்றி வருகிறார்கள். நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில் குண்டம் விழா நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சின்ன மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா சிறப்பாக நடந்தது.
புனிதநீர் ஊற்றி வழிபாடு
நேற்று ஈரோடு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன் மற்றும் காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் நடப்பட்டுள்ள கம்பத்துக்கு ஏராளமான பெண்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளிவிட்டு நின்று முக கவசம் அணிந்தபடி புனித நீர் ஊற்றி அம்மனை வழிபட்டனர். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. மேலும் இரவு 8 மணிக்கு பெண்கள் மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.
நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு 3 கோவில்களிலும் கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. வருகிற 13-ந் தேதி மறுபூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.
Related Tags :
Next Story