கொடுமுடி, ஊஞ்சலூர், கோபி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
கொடுமுடி, ஊஞ்சலூர், கோபி பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
ஈரோடு
கொடுமுடி, ஊஞ்சலூர், கோபி பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
கொடுமுடி
கொடுமுடியில் மிகவும் பிரசித்தி பெற்ற மும்மூர்த்திகள் தலமான மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி மாத கடைசி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்திபெருமானுக்கு பால், தயிர், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம், இளநீர், பன்னீர், சந்தனம், கரும்பு சாறு போன்றவைகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மூலவர் மகுடேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
ஊஞ்சலூர்
ஊஞ்சலூர் நாகேஸ்வர சாமி கோவிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. அப்போது உற்சவர் நாகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து நந்தி வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் அமிர்தவள்ளியுடன், நாகேஸ்வரர் எழுந்தருளி அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.
மேலும் கொளாநல்லி பாம்பலங்கார சாமி கோவில், கொந்தளம் நாகேஸ்வர சாமி கோவிலிலும் பிரதோஷத்தையொட்டி நந்தி பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கோபி
கோபி டவுன் அக்ரகாரம் ஈஸ்வரன் கோவில் வீதியில் விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி விசாலாட்சி, விஸ்வேஸ்வரர் சாமிகளுக்கு அபிஷேகமும், ஆராதனையும் நடந்தது.
முன்னதாக நந்தீஸ்வரருக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
இதேபோல் கோபி டவுன் மாதேஸ்வரன் கோவிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
Related Tags :
Next Story