தாளவாடி அருகே மீண்டும் சம்பவம்- நாட்டு வெடிகுண்டை கடித்த பசு மாடு படுகாயம்
தாளவாடி அருகே நாட்டு வெடிகுண்டை கடித்த பசு மாடு படுகாயம் அடைந்த சம்பவம் மீண்டும் நடந்து உள்ளது.
தாளவாடி
தாளவாடி அருகே உள்ள அருள்வாடி கிராமத்தை சேர்ந்தவர் சித்தராஜ் (வயது 28). விவசாயி. இவர் 4 பசு மாடுகள் வளர்த்து வருகிறார். இந்த மாடுகளை வழக்கம்போல் அருகில் உள்ள மானாவாரி நிலத்தில் அவர் மேய்க்க விட்டிருந்தார்.
அப்போது மேய்ந்து கொண்டிருந்த ஒரு மாடு கீழே கிடந்த நாட்டு வெடிகுண்டை கடித்து உள்ளது. இதில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் அந்த மாட்டின் வாய் சிதைந்து படுகாயம் அடைந்தது.
கடந்த வாரம் இதே பகுதியில் மல்லேசா என்பவரின் மாடு ஒன்று நாட்டு வெடிகுண்டை கடித்ததில் இறந்துவிட்டது. தற்போது மீண்டும் நடந்த இந்த சம்பவத்தால் விவசாயிகள் அச்சம் அடைந்து உள்ளனர். இதுகுறித்து அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘இந்த பகுதியை சேர்ந்த மர்ம நபர்கள் சிலர் காட்டுப்பன்றிகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டு வைப்பதாகவும், அதை கடித்ததால் மாடுகள் இறப்பதாகவும், எனவே இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,’ கோரிக்ைக விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story