விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அரக்கோணம் அருகே நடந்த இரட்டைக்கொலையை கண்டித்து திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
அரக்கோணம் அருகே நடந்த இரட்டைக்கொலையை கண்டித்து திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
அரக்கோணம் அருகே நடந்த இரட்டைக்கொலைைய கண்டித்து இன்று திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகில் உள்ள அறிவொளி பூங்கா எதிரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் அம்பேத்வளவன் தலைமை தாங்கினார். இதில் அரக்கோணத்தில் சமீபத்தில் நடந்த இரட்டைக்கொலையை கண்டித்தும், பா.ம.க.வினரை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆரணி
ஆரணி அண்ணா சிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் எம்.கே. பாஸ்கரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
வந்தவாசி
வந்தவாசி பழைய பஸ் நிலையம் மற்றும் தேரடி பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பழைய பஸ்நிலைய பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இணைச் செயலாளர் விஜய் தலைமை தாங்கினார். தேரடி பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொகுதி செயலாளர் மேத்தா ரமேஷ் தலைமை தாங்கினார்.
முன்னதாக காஞ்சீபுரம் சாலையில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பழைய பஸ் நிலையம், பஜார் வீதி வழியாக தேரடி பகுதியை அடைந்தனர். வந்தவாசியில் இருவேறு இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மூவேந்தன், இனியவன், தசரதன், வீரமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story