பெரியதுரையான் வாய்க்கால் அருகே தடுப்பணைகள் கட்டாததால் வறண்ட கிணறுகள்


பெரியதுரையான் வாய்க்கால் அருகே தடுப்பணைகள் கட்டாததால் வறண்ட கிணறுகள்
x
தினத்தந்தி 10 April 2021 6:53 PM IST (Updated: 10 April 2021 6:53 PM IST)
t-max-icont-min-icon

பெரியதுரையான் வாய்க்கால் அருகே தடுப்பணைகள் கட்டாததால் கிணறுகள் வறண்டு உள்ளன.


சத்திரப்பட்டி:

சத்திரப்பட்டி அருகே உள்ள சிந்தலவாடம்பட்டி, ராமபட்டிணம்புதூர் ஆகிய ஊர்களில் ஏராளமான விவசாய கிணறுகள் உள்ளன. இங்குள்ள விவசாய கிணறுகளில், மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பெரியதுரையான் வாய்க்காலில் இருந்து வரும் தண்ணீர் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும். பெரியதுரையான் வாய்க்கால் அருகில் போதிய தடுப்பணைகள் இல்லாததால் இப்பகுதியிலுள்ள விவசாய கிணறுகள் தற்போது வறண்டு உள்ளன. இதன் காரணமாக அப்பகுதி விவசாயிகள் கிணறுகளை பல லட்சம் ரூபாய் செலவில் தூர்வாரி வருகின்றனர். 

எனவே வடகிழக்கு பருவமழை காலத்தில் பெரியதுரையான் வாய்க்கால் அருகில் ஏராளமான தடுப்பணைகள் கட்டி மழைநீரை சேமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story