சங்கராபுரம் சந்தை மேட்டு தெருவில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் விபத்து அபாயம் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அச்சம்
தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் விபத்து அபாயம்
சங்கராபுரம்,
சங்கராபுரம் பேரூராட்சிக்கு உட்பட்டது சந்தைமேட்டு் தெரு. இங்கு புதன்கிழமைதோறும் வாரச்சந்தை நடைபெறும். அப்போது வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாகனங்களில் கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு செல்வார்கள். வாரச்சந்தை தவிர இந்த தெரு அருகே உழவர்சந்தை செயல்படுவதால் ஏராளமான பொதுமக்கள் நடந்தும், வாகனங்களிலும் சந்தை மேட்டு தெரு வழியாக சென்று திரும்புகிறார்கள்.
இந்த நிலையில் சந்தைமேட்டு தெருவில் உள்ள மின்கம்பங்களில் இருந்து மிகவும் தாழ்வாக 2 மின்கம்பிகள் செல்கிறது. இவ்வாறு செல்லும் இந்த மின்கம்பிகளால் வாரச்சந்தை மற்றும் உழவர் சந்தைக்கு காய்கறிகளை ஏற்றிச் செல்லும்போது விபத்து ஏற்பட்டு விடுமோ என வாகன ஓட்டிகள் ஒரு வித அச்சத்தில் சென்று வருகின்றனர். இதனால் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story