சாத்தான்குளம், கயத்தாறில் பரவலாக மழை


சாத்தான்குளம், கயத்தாறில் பரவலாக மழை
x
தினத்தந்தி 10 April 2021 9:46 PM IST (Updated: 10 April 2021 9:46 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம், கயத்தாறு பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சாத்தான்குளம்:
சாத்தான்குளம், கயத்தாறு பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பரவலாக மழை

சாத்தான்குளம் பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் மதியம் 1 மணி அளவில் திடீரென மழை பெய்தது. பரவலாக பெய்த இந்த மழை சுமார் 20 நிமிடம் நீடித்தது. 

இதையடுத்து சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து குளிந்த காற்று வீசியதையடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

கயத்தாறு

கயத்தாறில் கடந்த ஒரு வாரமாக வெயில் அடித்தது. மாலை 3 மணி அளவில் திடீரென வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 40 நிமிடங்கள் பெய்த இந்த மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் குளிர்ந்த சூழ்நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

Next Story