கோவில்பட்டியில் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி


கோவில்பட்டியில்   மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 10 April 2021 9:52 PM IST (Updated: 10 April 2021 9:52 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.

கோவில்பட்டி:
கோவில்பட்டியில் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.

மேம்பாலத்தில் மோதியது

தென்காசி மாவட்டம் வெள்ளாளங்குளம் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரராஜ் மகன் வெங்கடேஷ்வரன் (வயது 25). இவர் கோவில்பட்டி ராஜீவ் நகர் 3-வது தெருவில் உள்ள தனது சகோதரி மகேஷ்வரியின் வீட்டிற்கு சென்றுவிட்டு, அங்கிருந்து தனது தந்தை மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஊருக்கு புறப்பட்டார். 

கோவில்பட்டி லட்சுமி ஆலை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் திடீரென நிலைதடுமாறி மேம்பாலத்தின் தடுப்புசுவரில் மோதியது. இதில் கீழே விழுந்த வெங்கடேஷ்வரன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். 

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வாலிபர் பலி

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வெங்கடேஷ்வரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story