திருமுருகன்பூண்டியில் வாலிபர் குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி வந்து ஏற்படுத்திய விபத்தில் தொழிலாளி பலியானார்.
திருமுருகன்பூண்டியில் வாலிபர் குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி வந்து ஏற்படுத்திய விபத்தில் தொழிலாளி பலியானார்.
அனுப்பர்பாளையம்
திருமுருகன்பூண்டியில் வாலிபர் குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி வந்து ஏற்படுத்திய விபத்தில் தொழிலாளி பலியானார். 6 மோட்டார்சைக்கிள்கள் சேதமடைந்தன.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தொழிலாளி பலி
திருப்பூர் கொங்குமெயின் ரோட்டைசேர்ந்தவர் கிஷோர் சந்தர் இவர் நேற்று முன்தினம் அவினாசியில் இருந்து திருப்பூர் நோக்கி காரை ஓட்டி வந்தார். அந்த கார், திருமுருகன் பூண்டி வரவேற்பு வளைவு அருகேவந்தபோது, திடீரென்று சாலையில் தாறுமாறாக ஓடியது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
அதற்குள் அந்த கார் சாலையோரம் நின்று கொண்டிருந்த 6 மோட்டார்சைக்கிள்களை இடித்துதள்ளி விட்டு சாலையை கடக்க முயன்ற அம்மாபாளையத்தை அடுத்த கோபால்டு மில் பகுதியை சேர்ந்த பனியன் நிறுவன தொழிலாளி ஈஸ்வரமூர்த்தி (40) மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த ஈஸ்வர மூர்த்தியை அங்கிருந்தவர்கள், மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்தபோது அவர் இறந்து விட்டதாக டாக்டர்க்ள கூறினர்.
குடிபோதையில் கார் ஓட்டியவர் கைது
இதுகுறித்து தகவலறிந்து திருமுருகன்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கிஷோர் சந்தர் குடிபோதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியதும், அவருடன் மேலும் 2 பேர் காரில் வந்ததும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் கிஷோர் சந்தரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story