பெண்-செவிலியர் மாயம்


பெண்-செவிலியர் மாயம்
x
தினத்தந்தி 10 April 2021 11:24 PM IST (Updated: 10 April 2021 11:24 PM IST)
t-max-icont-min-icon

பெண்-செவிலியர் ஆகியோர் மாயமானார்கள்.

கரூர்
கரூர் கணபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் மகள் திவ்யா (வயது 23). இவர் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றார். பின்னர் வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து கனகராஜ் தனது மகளை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதேபோல், கரூர் வெஞ்சிமாங்கூடலூர் பகுதியை சேர்ந்தவர் பாரதிராஜா மனைவி மீனா (26). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியே சென்றவர் வீட்டிற்கு வரவில்லை. அதிர்ச்சியடைந்த பாரதிராஜா தனது மனைவியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பாரதிராஜா கொடுத்த புகாரின்பேரில், தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story