வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் ஆய்வு


வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 10 April 2021 11:24 PM IST (Updated: 10 April 2021 11:24 PM IST)
t-max-icont-min-icon

வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.

கரூர்
கருர் மாவட்டத்தில் உள்ள கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 6-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான தளவாபாளையம், எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு கண்காணிப்பு கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. மேலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை நேற்று மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிரசாந்த் மு.வடநேரே நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story