விடுதலை சிறுத்தைகள்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அரக்கோணம் இரட்டை கொலையை கண்டித்து மயிலாடுதுறை மற்றும் திருக்கடையூரில் விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை:
அரக்கோணம் இரட்டை கொலையை கண்டித்து மயிலாடுதுறை மற்றும் திருக்கடையூரில் விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு அரக்கோணத்தில் இளைஞர்கள் 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் குபேந்திரன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் அரக்கோணம் அருகே சோகனூரில் தேர்தல் முன்விரோதம் காரணமாக ஆதிதிராவிடர் இளைஞர்கள் 2 பேர் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், கொலை குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், கொலைக்கு காரணமான பா.ம.க. வை தடை செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய அமைப்பாளர் மோகன்குமார், இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநில துணை செயலாளர் ரியாஸ்கான், மாவட்ட பொருளாளர் அறிவழகன், ஒன்றிய பொறுப்பாளர்கள் கனிவல்லவன், காளி ஆனந்த் மாவட்ட இளைஞரணி செயலாளர் அன்புச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மற்றாரு ஆர்ப்பாட்டம்
இதேபோல முன்னாள் மாவட்ட அமைப்பாளரும், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி செயலாளருமான ஈழவளவன் தலைமையில் மற்றொரு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திலும் அதே கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் நிர்வாகிகள் ராஜமோகன், பாரதி வளவன், தமிழ்தென்றல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருக்கடையூர்
இதேபோல் மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர் கே.பி.மார்க்ஸ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட குழு உறுப்பினர் சிம்சன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் அரக்கோணம் அருகே சோமனூரில் தேர்தல் தகராறில் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனே நிவாரணம் வழங்கக்கோரியும் கோஷமிட்டனர்
Related Tags :
Next Story