பொள்ளாச்சி பகுதியில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தடுப்பூசி போட குழுக்கள் அமைக்கப்படும்


பொள்ளாச்சி பகுதியில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தடுப்பூசி  போட  குழுக்கள்  அமைக்கப்படும்
x
தினத்தந்தி 10 April 2021 11:38 PM IST (Updated: 10 April 2021 11:38 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி பகுதியில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தடுப்பூசி போட குழுக்கள் அமைக்கப்படும் என்று சப்-கலெக்டர் வைத்திநாதன் தெரிவித்தார்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி பகுதியில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தடுப்பூசி  போட  குழுக்கள்  அமைக்கப்படும் என்று சப்-கலெக்டர் வைத்திநாதன் தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் வைத்திநாதன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் தாசில்தார்கள் தணிகவேல், வெங்கடாச்சலம், ஸ்ரீதேவி, பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியம், தெற்கு ஒன்றிய மருத்துவ அலுவலர் ராஜ்குமார், நகராட்சி நகர்நல அலுவலர் ராம்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் சப்-கலெக்டர் வைத்திநாதன் கூறியதாவது:-
கொரோனா தொற்று பாதித்த பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதற்கிடையில் அந்த பகுதிகளில் தடுப்பூசி போடுவதற்கும், 100 பேருக்கு மேல் பணிபுரியும் இடங்களுக்கு சென்று தடுப்பூசி போடுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக நடமாடும் கொரோனா தடுப்பூசி குழு அமைக்கப்பட உள்ளது.

கொரோனா சிகிச்சை மையம்

மேலும் தொற்று பாதிக்கப்பட்ட இடங்களை தேவைப்பட்டால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றப்படும். குடிநீரில் குளோரின் அளவு அதிகரிக்கப்படும். தெற்கு ஒன்றிய அலுவலகத்தில் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையமாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 

இதை தவிர ஏற்கனவே அரசு ஆஸ்பத்திரியில் 120 படுக்கைகளும், நாச்சிமுத்து பிரசவ விடுதியில் 40 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன.
மேலும் பாதிப்பு அதிகமாகி தேவைப்பட்டால் ஏற்கனவே கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு இருந்த திருமண மண்டபத்தில் மீண்டும் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்படும். 

தொற்று உறுதி செய்யப்பட்டு 3 நாட்கள் சிகிச்சை அளிக்கப்படும். முழுமையாக குணமாகி விட்டால் அதன்பிறகு வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். இதை தவிர கபசுர குடிநீர் வழங்குதல், கிருமி நாசினி மருந்து தெளித்தல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

 மேலும் கொரோனா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பொள்ளாச்சி பகுதிகளில் விரைவில் கொரோனா தொற்று குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story